உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.ஜி., ஐடெக் கல்லுாரியில் கழிவுநீர் மேலாண்மை கருத்தரங்கு

நீலாம்பூர்: நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி., ஐடெக் சிவில் இன்ஜினியரிங் துறை மற்றும் சிறுதுளி அமைப்பு சார்பில் நீர்நிலை மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.கழிவு மேலாண்மைக்கான சிறப்பு மையத்தை மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா துவக்கி வைத்தார். பி.எஸ்.ஜி., நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் முன்னிலை வகித்தனர்.ஒப்பந்தபடி கழிவுநீர் மேலாண்மை, நகரில் உள்ள சாக்கடை கழிவுநீரை, பயோஎன்சைம் முறையில் துாய்மைப்படுத்துதல், நீரோட்டம் உள்ள கால்வாய்களில் கழிவுநீரை சுத்திகரித்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.சிறுதுளி நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி கூறுகையில், “காந்திமாநகர் முதல் சிங்காநல்லுார் குளம் வரை உள்ள 13 கி.மீ., துாரத்துக்கான கால்வாய் பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிதியுதவியுடன் சுத்திகரிக்கப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் பேராசிரியர் டாக்டர் வினோத் தாரே, கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்