மாநில அளவில் பேச்சுப்போட்டி புதுக்கோட்டை மாணவர் சாதனை
நாமக்கல்: கம்பன் கழகம் சார்பில், மாநில அளவிலான பேச்சுப்போட்டி, நாமக்கல்லில் நடந்தது. தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் கலைமாமணி அரசு பரமேஸ்வரன், அமைப்பாளர் தில்லை சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'கை வண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன், சொல் வண்ணம் எங்கு கண்டேன்', ஆகிய தலைப்புகளில் நடந்த போட்டியில், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, மதுரை, காரைக்குடி உள்பட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 45 கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று திறமையை வெளியப்படுத்தினர்.அதில், புதுக்கோட்டை ஜெ.ஜெ., கல்வியியல் கல்லுாரி மாணவர் மணிவாசகம் முதல் பரிசும், திருப்பத்துார் திருமால் கல்வியியல் கல்லுாரி மாணவர் மகேஸ் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலை மாணவர் நவீன் ஆகியோர் இரண்டாம் பரிசும், மதுரை தியாகராயர் கல்லுாரி மாணவர் சுப்ரமணியன், மூன்றாம் பரிசும் பெற்றனர். அவர்களுக்கு முறையே, 10,000 ரூபாய், 5,000 ரூபாய், 3,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.