உள்ளூர் செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் ரிஷிவந்தியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள், மாணவர்களுக்கு கல்வி சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, வாழ்வியல் நெறிமுறைகளை பாடல் மூலமாக பாடி மாணவ, மாணவிகளை ஊக்குவித்தார்.மேலும், மாதாந்திர மகிழ் முற்றம் சார்ந்த செயல்களில் சிறப்பாக செயல்பட்ட குழுவுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்