உள்ளூர் செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர் தமிழக அணிக்கு தேர்வு

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவர் விகுன் குமார், 14. இவர், திருச்சி மாவட்டம், தொட்டியம் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தமிழக அணியின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த தமிழக ஹேண்ட் பால் போட்டியில் சிறப்பாக விளையாடி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தமிழக ஹேண்ட் பால் அணியில் இடம் பெற்றார்.கோவை மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவர் விகுன் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், அக்., 27ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணியில், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடுகிறார்.தேர்வு செய்யப்பட்ட மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் தனக்குமார், சுதா உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்