ஹேண்ட்பால் அணிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
பெ.நா.பாளையம்: தமிழக ஹேண்ட்பால் அணிக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ரித்தீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.கரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான தமிழக ஹேண்ட் பால் அணி தேர்வு நடந்தது. இதில், 8 மண்டலத்தை சேர்ந்த, 98 வீரர்கள் கலந்து கொண்டனர்.தமிழக ஹேண்ட்பால் அணிக்காக, 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரித்திஷ் குமார், 16 மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.தமிழக அணி, டிச., மாதம் குஜராத் மாநிலத்தில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்கிறது. தேர்வு பெற்ற மாணவர் ரித்தீஷ் குமாரை, பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார், சுதா உள்ளிட்ட மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.