உள்ளூர் செய்திகள்

துாய்மை பணியில் மாணவர்கள் பரவும் வீடியோவால் பரபரப்பு

பெரம்பலுார்: பெரம்பலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் துாய்மை பணியில் ஈடுபடுத்திய வீடியோ பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. பெரம்பலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் சிலரை ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தை கூட்டி சுத்தம் செய்து, குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்த சொல்லி துாய்மை பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.மாணவர்களும் ஆசிரியரின் சொல்லுக்கு கீழ்படிந்து துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் ஆசிரியர் பெஞ்சில் அமர்ந்தவாறு மாணவர்களை துாய்மை பணி செய்ய வழிநடத்தி உள்ளார். இதை வீடியோ எடுத்த ஒருவர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் சொந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களை, ஆசிரியர்கள் துாய்மை பணியில் ஈடுபடுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமியி கூறுகையில், “பள்ளியில் துாய்மை பணியாளர் தனியாக உள்ளார். அவரே பள்ளியை நேற்று பள்ளியை சுத்தம் செய்தார்.திங்கள் கிழமை என்பதால் கொடியேற்றுவதற்காக கம்பம் உள்ள பகுதியில் ஆசிரியர்களும், மாணவர்களும் தேசியக்கொடியை கட்டிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் சருகுகள் கிடந்தன. அதையே மாணவர்கள் சுத்தம் செய்தனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்