பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்குட்பட்ட ல் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நேற்று நடந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த எடைக்கல் ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கி, போட்டிகளை துவக்கி வைத்தார்.மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜோதிமணி, விஷ்ணுமூர்த்தி, பாலமுருகன், பள்ளி முதல்வர் நிஷ்காம்ய பிராணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மோகன்செல்வம் வரவேற்றார்.இதில் 100 மீட்டம், 200 , 400 , 800 , 1,500 மற்றும் 3000 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிழை சி.இ.ஓ., கார்த்திகா வழங்கினார். இதில் ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டிகளை உடற்கல்வி இயக்குனர்கள் பாலாஜி, ஹரிஹரன், பாலகிருஷ்ணன், செந்தமிழ்செலவன், பாலுசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் பாலு, லோகநாதன், ஈஸ்வரன், சாமிதுரை ஆகியோர் போட்டிகளை நடத்தினர். மேலும் இப்போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.