உள்ளூர் செய்திகள்

பி.ஜி.பி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப திட்ட கண்காட்சி

நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் தன்னாட்சி பெற்ற மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை சார்பில், மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களையும், புதுமையான சிந்தனைகளையும் ஊக்குவிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்த திட்ட கண்காட்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் டாக்டர்.கவிதா தலைமை வகித்தார். கல்வி குழுமத்தின் டீன் டாக்டர் பெரியசாமி, தாளாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பொருட்களின் இணையம், ரோபோட்டிக்ஸ், தானியங்கி மின்னணு அமைப்பு மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட திட்டங்களை செயல்முறை விளக்கங்களுடன் காட்சிப்படுத்தினர்.விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிற்சாலை தானியக்கம் மற்றும் மக்களின் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை விளக்கினர்.இக்கண்காட்சி மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மை, புதுமையான சிந்தனை மற்றும் செய்முறை பயிற்சியை வளர்ப்பதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னணுவியல் துறைகளில் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்