சர்வதேச விண்வெளி வார விழா மாணவர்களுக்கு விழிப்புணர்வு
உடுமலை: உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், ஸ்ரீ ஆண்டாள் கல்வி அறக்கட்டளை மற்றும் வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்பட்டது.சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளி வார விழாவினை இணையவழியில் துவக்கி வைத்தார்.விழாவையொட்டி ஆறு நாட்கள், இஸ்ரோ, சி.எஸ்.ஐ.ஆர்., போன்ற அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் இணைய வழியில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.நிறைவு விழாவில், பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். கல்லூரி கணினிதுறை தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார்.ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இணை இயக்குனர் செந்தில்குமார், ராக்கெட் புரட்சி குறித்து பேசினார்.ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் மஞ்சுளா, பள்ளி மாணவர்களிடம் அறிவியல் துறையில் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு பேச்சு, அறிவியல் , வினாடி வினா ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார்.