உள்ளூர் செய்திகள்

வெற்றித்திறன் பயிற்சி திட்டம்; கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

வால்பாறை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த, 'வெற்றித்திறன்' பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லுாரி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், பி.காம்.,பாடப்பிரிவு மூன்றாம் ஆண்டு மாணவி பிரபாதேவி. இவர், தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் திறன்பயிற்சி திட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.இவர், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன் பயிற்சி பெறுவதற்கு தேர்வாகியுள்ளார். 'வெற்றித்திறன்' பயிற்சி திட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிக்கு, முதல்வர் ஷீலாபானு மற்றும் கல்லுாரி பேராசிரியர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்