உள்ளூர் செய்திகள்

பள்ளியில் கூடுதல் வகுப்பறை அமைச்சர் திறந்து வைத்தார்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, நல்லாத்துப்பாளையம், மாநகராட்சி துவக்க பள்ளியில் 88 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பூலுவபட்டி துவக்க பள்ளியில், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலும் வகுப்பறைகள், பிச்சம்பாளையம் பள்ளியில், 344.12 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 வகுப்பறை மற்றும் ஒரு ஆய்வுக்கூடம் ஆகியன கட்டப்பட்டுள்ளது.இவற்றின் திறப்பு வி7ழா, நேற்று மாலை பூலுவபட்டி பள்ளியில் நடைபெற்றது. விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். விழாவில், கலெக்டர் முத்துக்குமரன், மாநகராட்சி கமிஷனர் அமித், எம்.எல்.ஏ., சத்தியபாமா, மேயர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்