உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துவ படிப்புகளை விரிவுபடுத்த சென்னை பல்கலையில் ஆலோசனை

சென்னை: சென்னை பல்கலையில் கற்பிக்கப்பட்டு வரும், எம்.ஏ., கிறிஸ்துவ படிப்புகளை, பல்கலையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரிகளிலும் தொடங்க அனுமதி வழங்குவது குறித்து, இன்று நடைபெறும் 'சிண்டிகேட்' கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.நுாற்றாண்டு பழமையான சென்னை பல்கலையில், 85க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. இதில், கிறிஸ்துவ படிப்புகள் துறை வாயிலாக எம்.ஏ., கிறிஸ்துவ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.பல்கலையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற சிறுபான்மை கல்லுாரிகளிலும் இப்பாடப்பிரிவு கற்பிக்கப்படுகிறது.இந்நிலையில், பல்கலையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரிகளிலும் நடப்பு கல்வியாண்டு முதல் எம்.ஏ., கிறிஸ்துவ படிப்புகளை தொடங்க அனுமதி வழங்குவது குறித்து, பல்கலையின் கிறிஸ்துவ படிப்புகள் குழு, கடந்த மே 11ம் தேதி ஆலோசனை நடத்தியது.அக்குழுவின் பரிந்துரையின்படி, இன்று நடைபெறும் சிண்டிகேட் கூட்டத்தில், ஆறாவது அம்சமாக இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.பல்கலையில் சமயம் சார்ந்த படிப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிறிஸ்துவ படிப்புகளை அனைத்து கல்லுாரிகளிலும் தொடங்க அனுமதி வழங்கும் திட்டம், பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.கவர்னர் தலையிட்டு விளக்கம் தரணும்!கல்வி நிறுவனங்கள் மதம், ஜாதி, மொழி வேறுபாடின்றி, அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்கும் இடங்களாக திகழ வேண்டும். மதம் சார்ந்த பாடப்பிரிவுகள் குறித்து முடிவெடுக்கும் போது, சட்ட விதிமுறைகள், கல்வி தரம் மற்றும் சமத்துவ கோட்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.எனவே, இம்முன்மொழிவின் சட்டப்பூர்வ தன்மை மற்றும் பல்கலையின் அதிகார வரம்பு குறித்து, பல்கலை வேந்தரான தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேகர் தலையிட்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் பல்கலையின் தன்னாட்சியை பாதுகாப்பதில், எந்த சமரசமும் இருக்கக்கூடாது.- பன்னீர்செல்வம், மாநில செயலர், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்