உள்ளூர் செய்திகள்

தேர்தல் கல்வியறிவு: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

தேனி: மாணவர்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் கல்வியறிவு தொடர்பாக வினாடி வினா, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் தாலுகா அளவிலான போட்டியில் பங்கேற்றனர். தாலுகா அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் க.புதுப்பட்டி எஸ்.பி.எம்., ஜெய் டெக் பள்ளி லோக் தர்ஷ்னா, முதலிடமும், கட்டுரைப் போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திக் முதலிடமும் வென்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஆர்.ஓ., ரம்யா தேவி பரிசு வழங்கினார். தேர்தல் தாசில்தார் மருதுபாண்டி போட்டிகளை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்