உள்ளூர் செய்திகள்

எல்.ஐ.சி.,யில் உதவி நிர்வாக அதிகாரி பணி வாய்ப்பு

பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிறுவனம் நாடு தழுவிய கிளைகள், முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட மற்றும்சிறந்த வாடிக்கையாளர் சேவை, 54 வருடங்களுக்கும் மேலாக துறையில் முதன்மை போன்ற காரணங்களுக்காக அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரிப் பதவிக்கு (ஏ.ஏ.ஓ.,), ஜெனரலிஸ்ட், சார்டர்டு அக்கவுண்டண்ட், லீகல் மற்றும் கம்பெனி செகரடரிஷிப் என்ற நான்கு பிரிவுகளில் மொத்தம் 375 காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் ஜெனரலிஸ்ட் பிரிவில் 250 இடங்களும், சார்டர்டு அக்கவுண்டண்ட் பிரிவில் 100 இடங்களும், லீகல் பிரிவில் 20 இடங்களும், கம்பெனி ரெட்டரிஷிப் பிரிவில் 5 இடங்களும் உள்ளன. இந்தப் பகுதியில் ஜெனரலிஸ்ட் பணி இடங்களுக்கான தகவல்கள் இடம் பெறுகின்றன. முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். வயது வரம்புஎல்.ஐ.சி.,யின் நிர்வாக அதிகாரி ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்க 01.11.2010 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு உட்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதிஎல்.ஐ.சி.,யின் நிர்வாக அதிகாரி ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 45 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறைஎல்.ஐ.சி.,யின் நிர்வாக அதிகாரி ஜெனரலிஸ்ட் பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற இரண்டு நிலைகள் உள்ளன. எழுத்துத் தேர்வில் டெஸ்ட் ஆப் ரீசனிங், நியூமெரிகல் எபிலிட்டி, பொது அறிவு, டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்குவேஜ் ஆகிய அப்ஜெக்டிவ் பகுதிகளும், கட்டுரை எழுதுவது, சுருக்கி எழுதுவது, காம்ப்ரிஹென்சன் போன்ற டெஸ்கிரிப்டிவ் வகைக் கேள்விகளும் இருக்கும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மையங்களில் 27.02.2011 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் எல்.ஐ.சி.,யின் நிர்வாக அதிகாரி ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் ரூ.400/ஐ ரொக்கமாக மட்டும் செலுத்த வேண்டும். இந்தப் பணத்தை அக்கவுண்ட் எண் : 114033 என்ற கோடு எண்ணில் வரவு வைக்கப்படுகிறதா என்பதனையும் தவறாமல் சரி பார்க்கவும். பணம் செலுத்திய கிளையின் கோடு எண், எம்.ஆர்., எண், பணம் செலுத்திய தேதி, டிரான்சாக்சன் எண் போன்ற விபரங்கள் அனைத்தும் உங்கள் ரசீதில் துல்லியமாகத் தெரிகிறதா என்று சரிபார்க்கவும். ஏனென்றால் இந்த விபரங்கள் அனைத்தும் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறைஎல்.ஐ.சி.,யின் நிர்வாக அதிகாரி ஜெனரலிஸ்ட் பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில்விண்ணப்பிக்கும் முன்னர் விண்ணப்பக் கட்டணத்தை ஏதாவது ஒரு எல்.ஐ.சி., கிளையில் எம்.ஆர்., எனப்படும் மிசலேனியஸ் ரசீது வாயிலாக செலுத்தவும். இதன் பின்னரே எல்.ஐ.சி.,யின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும். ஆன்லைன் வாயிலாகவே முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் இருக்கும் என்பதால் உங்களுக்கு உபயோகத்தில் உள்ள ஒரு பிரத்யேகமான இமெயில் முகவரி இருப்பதனை உறுதிப்படுத்தவும். ஆன்லைனில் விண்ணப்பித்தபின் உங்களுக்கென்று யுனிக் ரெஜிஸ்ட்ரேஷன் எண் ஒன்று வழங்கப்படும். இந்த எண் வழங்கப்படுவதன் மூலம் மட்டுமே உங்கள் பதிவு உறுதிப்படுத்தப்படும். இந்த எண்ணை பத்திரமாக வைத்திருக்கவும். உங்கள் இமெயில் முகவரிக்கும் விண்ணப்பத்தின் நகல் ஒன்று அனுப்பி வைக்கப்படும். ஆன்லைன் பதிவு முடிந்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை போதுமான காப்பிகள் எடுத்து பத்திரமாக வைக்கவும். இதனைத் தற்போது எல்.ஐ.சி.,க்கு அனுப்பத் தேவையில்லை. எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற நிலைகளின் போது இது தேவைப்படும். முக்கிய தேதிகள்தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 13.12.2010ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள் : 14.12.2010தேர்வு அழைப்புக் கடிதம் பெறும் நாள் : 7.2.2010இணைய தள முகவரி: "http://jobs.licindia.co.in"


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்