உள்ளூர் செய்திகள்

கபில் சிபலுக்கு பிடித்தது மனிதவள மேம்பாட்டு துறைதான்!

வேறு துறைகள் தன் பொறுப்பில் இருந்தாலும், தனக்கு பிடித்தது மனிதவள மேம்பாட்டு துறைதான் என்று கபில் சிபல் கூறியுள்ளார். ஒரு பள்ளி விழாவில் பேசிய அமைச்சர் கபில் சிபல், "தகவல் தொடர்பு உள்ளிட்ட வேறு முக்கிய துறைகள் என்னிடம் இருக்கலாம். ஆனால் நான் எப்போதும் விரும்புவது மனிதவள மேம்பாட்டு துறையைத்தான். ஏனெனில் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதைவிட சிறந்த பணி வேறெதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக, நமது அரசியல் கட்டுமானம், ஆசிரியர் சமூகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாக இல்லை. மேலும் வரும் காலங்களில் ஆசிரிய தொழிலானது மிகவும் சவால் மிகுந்த ஒன்றாக மாறுவதோடு, ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்திலும் பெரிய மாற்றம் இருக்கும். எனவே இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், ஆசிரிய சமுதாயம் தயாராக வேண்டும். அத்தகைய தயாராதல் முயற்சிக்கு, அரசு உதவி செய்யும்" என்று கூறினார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் தனது செயல்பாட்டிற்காக, பிரதமர் மன்மோகன்சிங்கின் பாராட்டை பெற்றவர் கபில் சிபல் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்