பிரிட்டன் விசா: வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய முறை
பிரிட்டனின் மேற்படிப்புக்கு செல்லும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியாவை சேர்ந்தோர் அதிகம். கடந்த 2007ம் ஆண்டு பிரிட்டில் மேற்படிப்புக்கு சென்றோர் 22 ஆயிரம் பேர். அதற்கு முந்தைய ஆண்டை ஆண்டைவிட இது அதிகம்.ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, வெளிநாட்டு மாணவர்களுக்கு அவர்கள் பெற்றுள்ள புள்ளிகளின் அடிப்படையில் விசா வழங்கும் டயர் 4 என்ற புதிய முறையை பிரிட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்மூலம் விசா வழங்குவது வெலிப்படையானதாகவும் சிறப்பான மாணவர்களுக்கு குடியேற்ற சான்றிதழ் கிடைப்பது எளிதாகவும் மாறும் என்று கருதப்படுகிறது. விசாவுக்கு விண்ணப்பிக்க தங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை மாணவர்கள் தாங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.