உள்ளூர் செய்திகள்

உதவி பேராசிரியர் பணி நேர்முகத் தேர்வு துவக்கம்

சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேற்று துவங்கியது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,024 உதவிப் பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்த்தல் முடிந்த நிலையில், நேர்முகத் தேர்வு நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் துவங்கியது. தொடர்ந்து, பிப்ரவரி 5ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடக்கிறது. நேர்முகத் தேர்வுக்கு, 3,200 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்