அணு ஆய்வு மையத்தில் பயிற்சியாளர் பணி வாய்ப்பு
இந்திய அரசின் அணுதித் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை கல்பாக்கத்தில் இயங்கும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (ஐ.ஜி.சி.ஏ.ஆர்.,) பயிற்சியாளர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்னென்ன பிரிவுகள்?: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் கெமிக்கல் பிளான்ட் ஆப்பரேட்டர், லேபரட்டரி, மில் வெய்ட் பிட்டர், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஐந்து பிரிவுகளில் பயிற்சியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளார்கள். இவற்றில் முறையே 28, 5, 13, 2, 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித் தகுதி: சென்னை அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் இரண்டாண்டு கால ஐ.டி.ஐ., படிப்பையோ அல்லது மூன்றாண்டு கால என்.சி.டி.வி.டி., படிப்பையோ முடித்திருக்க வேண்டும். முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும். வயது வரம்பு: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.01.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 22 வயதுக்கு உட்பட்ட வராகவும் இருக்க வேண்டும். பயிற்சிக் காலம்: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியாளர்களாகத் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் இரண்டு ஆண்டு கால பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதில் முதல் ஆண்டில் மாதம் ரூ.6200/ம், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.7200/ம் ஸ்டைபண்டாக வழங்கப்படும். வெற்றிகரமாகப் பயிற்சியை முடிப்பவர்கள் &'பி&' அல்லது &'சி&' பிரிவு டெக்னீசியனாக கருதப்படுவார்கள். விண்ணப்பிப்பது எப்படி ?:இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சியாளர் காலியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் தங்கள் கையெழுத்திலேயே கேபிடல் எழுத்துகளில் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படம், சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பொறுத்த மட்டில் சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பிக்கும் முன் முழு விபரங்களையும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல்"Application for the post of Category & II, Trainee Post No:_________Trade / Name of the Post __________ against Advertisement, No.1/2011" என்று குறிப்பிடவும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 25.01.2011க்குள் கிடைக்குமாறு அனுப்பவும். முகவரி: Administrative Officer & II(R),Indira Gandhi Centre for AtomicResearch, Kalpakkam-603 102.