உள்ளூர் செய்திகள்

அரசு கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனம்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 836 பேர் உதவி பேராசிரியர்களாக நியமிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதிப்பெண், அனுபவம்,நேர்முகத் தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், பல்வேறு பாடங்களுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, 836 உதவி பேராசிரியர்களின் பட்டியலை http://trb.tn.nic.in இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கு பதிவு தபாலில் தகவல் தெரிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்