உள்ளூர் செய்திகள்

‘பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்’

மதுரை: “பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்,” என கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் பேசினார். மதுரை விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த, ‘ஸ்போர்ட்ஸ் கவுன்சில்’ அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின்கீழ் விளையாட்டில் சாதனை புரியும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவி, ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். அதை பிரபல விளையாட்டு வீரர்கள் மூலம் மாணவர்களை பாராட்டி வழங்கி வருகின்றனர். 2007ல் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இதை துவக்கி வைத்தார். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.,லட்சுமணன் நேற்று பள்ளிக்கு வந்தார். அவரை முதல்வர் சந்திரசேகர் வரவேற்றார். விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களை லட்சுமணன் பாராட்டி மாலை அணிவித்தார். அவர் பேசியதாவது: இப்பள்ளியின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளதுடன், நல்ல குடிமகனை உருவாக்கும் நிலையில் உள்ளது. ஆசிரியர்கள் எவ்வித பிரதிபலனும் பாராமல், மாணவர்களை தங்கள் குழந்தைகளாக பாவித்து பணியாற்றுகின்றனர். எனது வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு அதிகமாகவே உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிகநேரம் செலவிட வேண்டும். அப்போதுதான் அவர்களை சமுதாயத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரமுடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்