உள்ளூர் செய்திகள்

பல்கலையாக மாற்ற இன்னும் முடிவு செய்யப்படவில்லை: பொன்முடி

கோவை: “பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனத்தை, பல்கலையாக தரம் உயர்த்த இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை,” என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கோவை பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை ஒருமை பல்கலையாக தரம் உயர்த்துவது பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஆகஸ்ட் 7ம் தேதி நடந்தது. இந்த அரங்கத்தில் உள்ள அனைத்து ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டன. இக்கூட்டத்தில் பங்கேற்க பத்திரிகையாளர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டத்தின் முடிவில் அமைச்சரை சந்திக்க பத்திரிகையாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதற்காக மக்கள் தொடர்பு அதிகாரி கண்ணதாசனிடம் கேட்டபோது,‘ பத்திரிகையாளர்களை சந்திக்க அமைச்சர் விரும்பவில்லை’ என்றார். கருத்துக்கேட்பு கூட்டம் முடிந்து காரில் ஏறிய அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர், “பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக தரம் உயர்த்துவது பற்றி இரு தரப்புகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக தரம் உயர்த்த இன்னும் அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்