உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி-ஜே.இ.இ. தேர்வு கணிதத் தாளில் பிழை

அவர்கள் இந்த புகாரை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளனர். அந்த புகாரை வினாத்தாள் தயாரித்த கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாகவும், 3 நாட்களுக்குள் அதற்கு பதிலளிக்குமாறு கேட்டுள்ளதாகவும் கான்பூர் ஐ.ஐ.டி. இயக்குனர் சஞ்சய் கோவிந்த் டாண்டே தெரிவித்துள்ளார். அந்த கமிட்டியானது விசாரணையை முடித்தவுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே மாணவர்கள் அவதிப்பட தேவையில்லை. தேர்வின் முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி மே 25 ம் தேதி வெளியிடப்படும். ஐ.ஐ.டி-கான்பூர் ஒருங்கிணைத்து ஏப்ரல் 10 ம் தேதி நடத்திய ஐ.ஐ.டி-ஜே.இ.இ. தேர்வை, நாடு முழுவதும் 131 நகரங்களில் மொத்தம் 4,85,262 மாணவர்கள் எழுதினார்கள். மொத்தம் 1051 மையங்களில் அந்த தேர்வு நடைபெற்றது. நாட்டில் தற்போது செயல்படும் 16 ஐ.ஐ.டி -கள் மற்றும் இந்திய சுரங்கங்கள் கல்வி நிறுவனம்(ஐ.எஸ்.எம்) ஆகியவற்றில் சேர்த்து தோராயமாக 10000 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்