அரசு நிலத்தில் கட்டப்பட்ட கல்லுாரி இடிப்பு; ரூ.100 கோடி மதிப்பு
சென்னை: அரசு நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட தனியார் கல்லுாரி கட்டடம், பொக்லைன் உதவியுடன் அகற்றி, சீல் வைக்கப்பட்டது.மீட்கப்பட்ட, 1.5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய். சென்னை புனித தோமையார்மலை கிராமம், பரங்கிமலை, ஜி.எஸ்.டி., சாலை அருகில் புல எண் 1,356ல், 3 ஏக்கர், 33,141 சதுர அடி அரசு நிலம் உள்ளது.நோட்டீஸ்அதில், ரெமோ இன்டர்நேஷனல் கல்லுாரி, சங்கீதா ஹோட்டல், நியூ கிராண்ட் ஸ்வீட்ஸ் காபி ஷாப், ஆசிப் பிரியாணி ஆகியவை செயல்பட்டு வந்தன. அது, காலம் கடந்த குத்தகை நிலம் என்பதால், ஆக்கிரமிப்பாளராக கருதி, தமிழக அரசின் ஆக்கிரமிப்பு சட்டத்தின் படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, கடந்த ஜன., 31ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், ரெமோ கல்லுாரி நிர்வாகம் சார்பில் பெரிய அளவில் அலுவலகங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இத்தகவல் அறிந்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவு படி, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, கல்லுாரி நிர்வாகம் கட்டுமானம் செய்த கட்டடங்கள் பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன. மின் இணைப்பு முழுதும் துண்டிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.சட்ட நடவடிக்கைதாசில்தார் ஆறுமுகம் கூறியதாவது:கல்லுாரி நிர்வாகத்திற்கு இடத்தை காலி செய்ய ஒரு வாரம், கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 1.5 ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கு மேல்.அரசு புறம்போக்கு இடத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டி வரும் ரெமோ கல்லுாரி உரிமையாளர் ரித்திக் பாலாஜி, முதல்வர் தீபா மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.