உள்ளூர் செய்திகள்

விடா முயற்சியே வெற்றியை தேடித்தரும் யு.பி.எஸ்.சி.,ல் 101 இடம் பெற்ற திண்டுக்கல் டாக்டர் பெருமிதம்

திண்டுக்கல்: “விடாமுயற்சி மட்டுமே வெற்றியை தேடித்தரும்” என யு.பி.எஸ்.சி., தேர்வில் இந்தியளவில் 101 இடம் பெற்ற திண்டுக்கல் கால்நடை டாக்டர் டிசோசாமனோஜ் கூறினார்.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஓய்வு ஆசிரியர் ஆனந்த்,ஜெபமாலைமேரி தம்பதியின் மகன் டிசோசாமனோஜ்.ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு கால்நடை மருத்துவமனை டாக்டராக பணிபுரிகிறார். 2025 மே மாதம் யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் மார்ச்சில் வெளியானது.இதில் வெற்றி பெற்று இந்தியளவில் 101வது இடம் பெற்றார். இதை தொடர்ந்து வனத்துறை ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்வான டிசோசா மனோஜ்க்கு கலெக்டர் சரவணன் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.டிசோசா மனோஜ் கூறியதாவது: 2021 முதல் யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத துவங்கினேன். முதல் 2 முறை வெற்றி வாய்ப்பை இழந்தேன். மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றேன். தற்போது எனது கனவு நனவாகி உள்ளது.யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத விரும்புவோர் முயற்சியை கைவிட கூடாது. விடாமுயற்சி மட்டுமே வெற்றியை தேடித்தரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்