உள்ளூர் செய்திகள்

இன்ஜி., தரவரிசை பட்டியல் வெளியீடு; வரும் 13ல் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகான, கலந்தாய்வு தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. முதல்கட்ட கலந்தாய்வு, வரும் 13ம் தேதி தொடங்குகிறது.அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், ஏழு புதிய கல்லூரிகள் உட்பட, 484 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 2026 - 27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, கடந்த மே 5 முதல், ஜூன் 5 வரை நடந்தது.மொத்தம், 3 லட்சத்து 2,373 விண்ணப்பங்கள் பதிவாகின. இதில், 2 லட்சத்து 45,235 பேர், பதிவு கட்டணம் செலுத்தினர்.அவர்களில், தகுதியான மாணவ மாணவியர் தரவரிசை பட்டியலை, நேற்று சென்னையில் உள்ள, தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார்.பொதுப்பிரிவில், 2 லட்சத்து 36,017 மாணவ, மாணவியருக்கான தரவரிசை; 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 46,604 மாணவர்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்டது.பொதுப்பிரிவில், தர்மபுரி மாணவி அக்ஷிதா முதலிடம் பிடித்தார். திருப்பூர் ரோகித் பாலன் 2ம் இடம்; நாமக்கல் வெங்கடகிருஷ்ணன் 3ம் இடம்; அரியலூர் ரக்ஷிதா 4ம் இடம்; கன்னியாகுமரி ரத்தன் எஸ்.ஜோ ஐந்தாமிடம் பிடித்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு தரவரிசையில், சேலம் வீரபாண்டி மாதிரி பள்ளி மாணவி தேவதர்ஷினி; திருச்சி முகமேஷ்; திருவண்ணாமலை ஜனார்த்தனம்; ஈரோடு கெவின்; சேலம் கோகுலகிருஷ்ணன் ஆகியோர், முதல் ஐந்து இடங்களைப் பிடித்தனர்.பொதுப்பிரிவு கலந்தாய்வு தரவரிசையில் குறைகள் இருந்தால், வரும் 6ம் தேதிக்குள், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை மையத்துக்கு, நேரில் சென்று முறையிடலாம்.'கட் ஆப்' குறையும்கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:நடப்பாண்டு இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண், 1 - 10 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு 141 பேர், 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர்; இப்போது, 52 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 199 கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கிடைத்த இடம், இந்த ஆண்டு 195 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு கிடைக்கும்.இந்த முறை கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு படிப்புகளை போல, மெக்கானிக்கல், இ.சி.இ., ஆகிய முக்கிய படிப்புகளை மாணவர்கள் ஆர்வமாக தேர்வு செய்வர். இதை 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களை காணும் போதே கணிக்க முடிந்தது.கம்ப்யூட்டர் பிசினஸ் சிஸ்டம், கம்ப்யூட்டர் மற்றும் வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகிய கணினி இன்ஜினியரிங் சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் குறைய வாய்ப்பு உள்ளது.மாணவர்கள், கடந்த ஐந்தாண்டு கட் - ஆப் மதிப்பெண் விபரங்களை, www.tneaonline.org சரிபார்த்து, கவனமாக கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.53 பேர் 200க்கு 200இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில், 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, 53 ஆக உள்ளது. அதில், மாநில பாடத்திட்டத்தில் படித்த 39 பேர்; மற்ற பாடத்திட்டத்தில் படித்த 14 பேர் அடங்குவர்.முதல்கட்ட கலந்தாய்வுதேதி - பிரிவுஜூலை 13 முதல் 147.5% ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வுஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வுஜூலை 20 முதல் ஆக., 30 வரை பொதுப்பிரிவு, 7.5% ஒதுக்கீட்டுக்கு மாணவர்களுக்கான கலந்தாய்வு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்