உள்ளூர் செய்திகள்

ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு வரும் 14ம் தேதி நேர்முக தேர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படை வீரர் பணியிடத்திற்கு, வரும் 14ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் வரும் 14ம் தேதி, ஊர்க்காவல் படை வீரர் பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வு நடக்கிறது.காலை 8 மணியளவில் நடைபெறும் இத்தேர்வில், மாவட்டத்திற்குள் வசிக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். தேர்வுக்கு வருபவர்கள் கல்விச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் 2 புகைப்படங்களுடன் வர வேண்டும்.தேர்வாகும் நபர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்ததும் தேர்வாகிய நபர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., சான்றிதழ் வைத்திருப்பவர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்