முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல்: ஆக. 17ல் வெளியீடு
சென்னை: முதுகலை ஆசிரியர்கள் 250 பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், 17ம் தேதி வெளியாகிறது. பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், 250 பணியிடங்கள் நிரப்பப்படாமல் நிலுவையில் இருந்தன. இதற்காக, மாநில பதிவு மூப்பில் தகுதி வாய்ந்த 900 பேர், சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 600 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து 250 பேரை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. ஆக. 17ம் தேதி, தேர்வுப் பட்டியலை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.