உயர்கல்வி சேர்க்கையில் குளறுபடி தவிர்க்க பிளஸ் 2 தேர்வு கட்டாயம்
சிவகங்கை: &'&'தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கையில் குளறுபடி ஏற்படுவதை தவிர்க்க, கட்டாயம் பிளஸ் 2 பொது தேர்வினை அரசு நடத்த வேண்டும்,&'&' என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர். இளங்கோவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கொரோனா ஆட்டிப்படைக்கும் வேளையில் தாக்கம் குறைந்த நேரத்தில் இரண்டு மாதங்கள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது அவர்கள் இழந்த கற்றல் நாட்களின் பாதிப்புகளை நன்கு உணர்ந்து படித்தனர். மீண்டும் ஆன்லைன் மூலம் திருப்புதல் தேர்வு நடத்தி, பாடங்களுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர்.கொரோனா இரண்டாம் அலை வேகம் குறைகிறது. பிளஸ் 2 மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அறைக்கு 10 முதல் 20 மாணவர்களை அனுமதித்து, உரிய பாதுகாப்புடன் தேர்வை நடத்த வேண்டும்.தேர்வே நடத்தாமல், தேர்ச்சி அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் செயல். மெல்ல கற்கும் 10 சதவீத மாணவர்களுக்கு வேண்டுமானால், ஆல்பாஸ் திட்டம் பயனளிக்கும். நன்கு படிக்கும் 90 சதவீத மாணவர்களுக்கு உயர்கல்வியில் சாதிப்பது போன்ற எதிர்கால திட்டங்கள் பாழாகி விடும்.உயர்கல்வி சேர்க்கையில் பல்வேறு குளறுபடியும் ஏற்படும்.எனவே தமிழக அரசின் கல்வித்துறை, குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் இருந்து வினாத்தாட்கள் தயாரித்து, மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வினை நடத்த வேண்டும், என்றார்.