உள்ளூர் செய்திகள்

சர்வதேச பின்னலாடை கண்காட்சி புதுடில்லியில் ஜூன் 25ல் துவக்கம்

திருப்பூர்: இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் ஜன., மற்றும் ஜூன் -ஜூலை மாதங்களில் சர்வதேச பின்னலாடை கண்காட்சிகள் இருமுறை நடத்தப்படுகின்றன. ஆண்டு துவக்கத்தில் குளிர்கால வர்த்தக வாய்ப்பு களையும், இரண்டா வது கண்காட்சி, வசந்த கால மற்றும் கோடைக்கால ஆர்டர்களையும் வழங்குகிறது.ஏற்றுமதியாளர்கள், ஆயத்த ஆடை வர்த்தகத்தை மேம்படுத்த, இந்த கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுடில்லி, துவாரகாவில் உள்ள, யாஷோபூமி வர்த்தக மையத்தில், 71வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி, ஜூன் 25ல் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.உலகளாவிய ஜவுளி வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள், உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் பங்கேற்க உள்ளனர்.இதுகுறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:இந்த கண்காட்சியில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பின்னலாடைகள், மறுசுழற்சி தொழில்நுட்பஆடைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.மேலும் பேஷன் ஆடைகளுக்கான இயந்திரங்களின் உதிரி பாகங்களும் இடம்பெறும். அத்துடன் ஆடை ஆபரண வடிவமைப்பாளர்களையும் சந்திக்கலாம். இவை அனைத்துக்குமான வாய்ப்பு ஒரே இடத்தில் கிடைக்கும்.ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச வர்த்தகர்கள், கண்காட்சியில் பங்கேற்று, கோடிக்கணக்கான ரூபாய் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அடித்தளமிடுகின்றனர்.தற்போதைய நிலவரப்படி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில், திருப்பூர் மட்டுமே முன்னோடியாக இருக்கிறது. ஏற்றுமதியாளர், இந்த கண்காட்சியில் பங்கேற்று, புதிய ஆர்டர்களை ஈர்க்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்