இந்திய பி-ஸ்கூல் பட்டதாரிகளின் ஊதியம் 30 சதவீதம் உயர்வு!
ஆம், இந்த மாணவர்களுக்கான வேலை வாய்ப்பில் நிர்ணயிக்கப்படும் ஊதியம் 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அனைத்து இந்திய மேலாண்மை கழகம், பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழுடன் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. நாட்டிலுள்ள 23 மாநிலங்களில், 108 நகரங்களில் உள்ள 258 கல்வி நிறுவனங்களின் தரம், கல்வி முறை, ஆசிரியர்களின் திறன், உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, இந்தாண்டு சிறந்த பி-ஸ்கூல் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. உலகளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, மாற்றங்கள், முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில், இந்திய மாணவர்களுக்கு பெரும்பாலும் உள்நாட்டு நிறுவனங்களே இந்த உயர்ந்த ஊதியத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது. ‘திறமை மிக்க, தகுதியான மேலாளர்களின் தேவையால், தொழில் நிறுவனங்கள் அதிக ஊதியத்தை வழங்குகிறது’ என்று ஐ.ஐ.எம்., அகமதாபாத் இயக்குனர் பருவா தெரிவித்துள்ளார். இவர்களுக்கு சரசரியாக ரூ.10 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படுகிறது.