சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்கு செப்., 6ல் தகுதித்தேர்வு
திண்டுக்கல்: தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு செப்., 6ல் நடக்கிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 393 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக 2 பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 132 பேரும், ஜான்பால் மேல்நிலைப் பள்ளியில் 260 பேரும் தேர்வு எழுதுகின்றனர். ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் கண்காணிப்பில் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.