உள்ளூர் செய்திகள்

மாநில நல்லாசிரியர் விருதுக்கு தர்மபுரி மாவட்டத்தில் 9 பேர் தேர்வு

தர்மபுரி: மாநில நல்லாசிரியர் விருது பெற, தர்மபுரி மாவட்டத்தில் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் செப்., 5ல் நடக்கும் ஆசிரியர் தினவிழாவில், மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் &'மாநில நல்லாசிரியர்&' விருது வழங்கப்படுகிறது. அத்துடன், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பதக்கம், நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் கொரோனாவால், சென்னையில் முதல்வரும், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர், கலெக்டர், அதிகாரிகள் தலைமையில், நாளை (7ல்) நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.தர்மபுரி மாவட்டத்தில் விருது பெறுவோரின் விபரம் வருமாறு:இதில், தலைமையாசிரியர்களான, ஏலகிரி, அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கவேல்; வெள்ளோலை அரசு உயர்நிலைப்பள்ளி, கேசவகுமார்; பாப்பிரெட்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கற்பகம்; மிட்டாநூலஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, பாரதி; நல்லம்பள்ளி - ஏறுபள்ளி யூனியன் நடுநிலைப்பள்ளி, புவனேஸ்வரி; பாலக்கோடு - சக்கிலிநத்தம் பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி, சுமதி; கடகத்தூர் பாத்திமா நிதியுதவி துவக்கப்பள்ளி, அம்புரோஸ் லாரன்ஸ்; மற்றும் குண்டலமடுவு பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சதாசிவம், தர்மபுரி தனியார் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருணகிரி என, ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்