போர்க்கால அடிப்படையில் தயாராகிறது மத்திய கவுன்சிலின் 9ம் வகுப்பு புத்தகம்
புதுடில்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி தயாரிக்கப்பட்ட, ஒன்பதாம் வகுப்பு புத்தகங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டதை அடுத்து, போர்க்கால அடிப்படையில் அவற்றை அச்சிடும் பணியில் என்.சி.இ.ஆர்.டி., ஈடுபட்டுள்ளது.என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில், டில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது.சீர்த்திருத்தம் கல்வி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை வழங்குவதுடன், மத்திய மற்றும் மாநில பள்ளிகளின் பாடத்திட்டத்தை வடிவமைத்து, பாடநுால்களையும் என்.சி.இ.ஆர்.டி., அச்சிட்டு வருகிறது.இந்த கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு பாடங்களை, மத்திய அரசின் சமீபத்திய தேசிய கல்வி கொள்கையின்படி அந்நிறுவனம் தயாரித்து அச்சடித்து வருகிறது.இந்த பாடப்புத்தகங்களுக்கு சமீபத்தில் தேவை அதிகரித்தது. இதையடுத்து, போர்க்கால அடிப்படையில் அவற்றை அச்சிடும் பணியில் என்.சி.இ. ஆர்.டி., ஈடுபட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:ஒரு பாடநுால், புதிய பாடத்திட்டத்துக்கு மாறுவது நாடு தழுவிய மிகப்பெரிய சீர்திருத்தம். அதை அச்சடித்து வெளியிடுவது மிகவும் சவாலான விஷயம்.இந்தாண்டுக்கான, ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகம் தேசிய கல்வி கொள்கை, 2020ஐ பின்பற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேவை அதிகரித்ததால், போர்க்கால அடிப்படையில் அச்சிடப்பட் டு நாடு முழுதும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.வினியோகம் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வசதிக்காக வார இறுதி நாட்களிலும், டில்லியில் உள்ள தலைமையகத்தில் விற்பனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக ஆர்டர் செய்யும் பள்ளிகள், நிறுவனங்களுக்கு பாடப்புத்தகங்களை நேரடியாக வினியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.