உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி

மாணவர்களை போட்டித் தேர்வுக்குத் தயார் செய்வதற்காக கேட் வே என்ற மையமும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு மையங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இது குறித்து, பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளர் லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: நாடு முழுவதுமுள்ள தேர்ந்தேடுக்கப்பட்ட பள்ளிகளில் இந்த பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படும். ஸ்பீக்இங் பயிற்சி 150 மையங்களிலும், கேட்வே பயிற்சி மையம் 25 பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில திறனை மேம்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பத்து பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த பள்ளிகளில் 8ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு எந்தவிதமான கட்டணங்களையும் மாணவர்கள் செலுத்த வேண்டியதில்லை. இப்பயிற்சியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் சேசருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக, 25 பள்ளிகளுடன் ஒன்றிணைந்து, மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன், தன்னம்பிக்கை பயிற்சி, சசவால்களை சசந்திக் கும் திறன் ஆகிய பயிற்சிகளை வழங்கவுள்ளோம். அடுத்த மார்ச் மாதத்திற்குள் ஐம்பது ஸ்பீக்இங் மையங்களையும், இருபத்தைந்து கேட்வே மையங்களையும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள், ஏ.ஐ.இ.இ.இ., ஐ.ஐ.டி., கேட் போன்ற போட்டி தேர்வுகளை எளிதாக சந்தித்து வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஆல்பர்ட் பி ராயன், எஸ்.ஆர்.எம்., ஸ்பீக்இங் மையத்தையும், விஜயகுமார் கேட்வே மையத்தையும் துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்