உள்ளூர் செய்திகள்

இ.ஆர்.கே., கல்லூரியில் இலவச தொழிற்கல்வி படிப்பு

இ.ஆர்.கே., மகளிர் சமுதாய கல்லூரியில் இலவச தொழிற்கல்வி சேர்க்கை நடக்கிறது. கல்லூரி முதல்வர் சக்தி வெளியிட்ட அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்நாடு தொழில் நுட்ப கழகம் சார்பில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் சார்ந்த படிப்புகளை நடத்தி வருகிறது. கிராம பகுதி மாணவர்கள் பொருளாதார ரீதியில் மேம்பாடு அடையும் நோக்கில் அரூர் அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே., மகளிர் சமுதாய கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு இலவச சேர்க்கை நடக்கிறது. இக்கல்லூரியில் தையல் பயிற்சி, அழகு கலை, மொபைல்ஃபோன் சர்வீஸ், கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் ஞாயிறு மட்டும் நடக்கும். எட்டாம் வகுப்பு படித்த மகளிர்கள் இப்பயிற்சியில் சேரலாம். ஆறு மாத இடைவெளிக்கு பின் பெரியார் பல்கலைக்கழக சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்கள் பெற விரும்புவோர் 97883 - 43727, 99434 - 72183 என்ற மொபைல்ஃபோன் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்