ஆஸி.யில் இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை
சென்னையில், ஜியோப்ரே கொனாகன் அளித்த பேட்டியில், ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல் மற்ற நாட்டு மாணவர்களுக்கும் சில பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். சில ஆஸ்ட்ரேலிய மாணவர்களும் இந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகங்கள் இந்த சம்பவங்களை பெரிதுப்படுத்தி வருகின்றன. இந்த வன்முறைகளைத் தடுக்க விக்டோரியா அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சாலைகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் போலிசாரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இரவிலும் அதிக எண்ணிக்கையில் போலிசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விக்டோரிய மாநில அரசு புதிய கல்வி கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமும் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய மாணவர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை உதவித் தொகையாக கிடைக்கும். இதற்காக ரூ.4.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.