பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியல் வெளியீடு
முதலில் 6 பாடங்களுக்கான ஆசிரியர்களின் பட்டியலும், பிறகு 3 பாடங்களுக்கான ஆசிரியர்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in/GA2011/28022011A/stat.asp இணையதளத்தில் வெளியிடப்படும். செப்டம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் முழுமையான பட்டியல் வெளியாகிவிடும். ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அனைத்து விஷயங்களும் வெளிப்படையா க நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் அனைத்துத் தகுதிகளும், பதிவு மூப்பு உட்பட அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், ஆசிரியர் பணி நியமன ஆணை அனைவருக்கும் உடனடியாக அனுப்பப்படும். இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் அரசுப் பணி கனவு விரைவில் நனவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் கடந்த ஆண்டே துவங்கி சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நிறைவடைந்து பணி நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பணி நியமன ஆணை அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. அத னபிறகு இந்த பணி நியமனத்திற்காக வேலை வாய்ப்பு ஆணையர் அலுவலகம் 5 முறை பட்டியல்கள் அனுப்பியது. இதனால் பணி நியமன இறுதிப் பட்டியலைத் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை முதல் பணி நியமன பட்டியல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.