உள்ளூர் செய்திகள்

தனியார் கல்லூரி மாணவர்களுக்கான பேருந்து பாஸ்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெள்ளை போர்டு, மஞ்சள், எம் சர்வீஸ், எக்பிரஸ், டீலக்ஸ், குளிர்சாத வசதி என விதவிதமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவ, பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சலுகை விலையில் பேருந்து பாஸ் வழங்கி வருகிறது. ஒரு மாதத்திற்கு எவ்வளவு தூரத்தில் இருந்து வரும் மாணவராக இருப்பினும் 80 ரூபாய் அளித்து பேருந்து பாஸ் வாங்கிக் கொள்ளும் வகையில் இந்த சலுகை அமைந்துள்ளது. ஆனால் இந்த சலுகையைப் பயன்படுத்தி வெள்ளை, மஞ்சள் நிற போர்டு, எம் சர்வீஸ் பேருந்துகளில் மட்டுமே மாணவர்கள் பயணிக்க முடியும். டீலக்ஸ் பேருந்துகளில் கூடுதல் டிக்கெட் எடுத்தால் மட்டுமே பயணிக்கலாம். இந்த நிலையால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சலுகை விலையில் பேருந்து பாஸ் பெறும் மாணவர்கள் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் பயணிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு உடனடியாக செவி சாய்த்தால் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்