உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் காஞ்சியில் துவக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், 19ம் தேதி துவங்குகிறது. நடப்பு ஆண்டிற்கான அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாவட்டத்திற்குள் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகியோருக்கான மாறுதல் கலந்தாய்வு கூட்டம், காஞ்சிபுரம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், 20ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும், என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்