உள்ளூர் செய்திகள்

அரசு பணிகளில் அதிகாரி ஆக ஆசையா?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற அகில இந்தியத் தேர்வுகளும், இந்தியன் ரயில்வே சர்வீஸ் போன்ற குருப் ஏ தேர்வுகளும் மற்றும் "குருப் பி&', யு.பி.எஸ்.சி., பி.சி.எஸ்., எஸ்.சி.எஸ்., பி. எஸ்.சி., போன்ற தேர்வுகளும் நடக்கிறது. இத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு, விடா முயற்சி தேவை. இப்பணியின் மூலம், வாழ்க்கை, சமுக பொருளாதார, அந்தஸ்து உயரும். தேர்வு எழுத தகுதிகள்:1. இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.2. 21-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.3. இளநிலை பட்டப் படிப்பு அவசியம். எத்தனை முறை எழுதலாம்:பொதுப்பரிவினர் 4 முறையும், ஓ,பி.சி., பிரிவினர் 7 முறையும் தேர்வு எழுதலாம். இதர பிரிவினருக்கு வரைமுறை இல்லை. தேர்வு முறைகள்:மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகின்றன. அவை:1.முதனிலைத் தேர்வு2.முதன்மைத் தேர்வு3. நேர்காணல் தேர்வு முதனிலைத் தேர்வில் பொது அறிவு, விருப்பப் பாடம் என தாள்கள் உள்ளன. பொது அறிவு தாளுக்கு 150 மதிப்பெண்கள் (இதில் ஆப்டிடியூட் மற்றும் ரீசனிங் அடக்கம்), விருப்ப பாடத்துக்கு 300 மதிப்பெண்களுக்கு உள்ளன. புதிய முறைப்படி, இத்தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் பெறுபவர்களே, அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வில் 9 தாள்கள் மற்றும் நேர்முகத்தேர்வு என 2,300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடக்கும். இத்தேர்வில், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் பெறுபவர்களே அடுத்த கட்டமாக, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் ஆக்கப்பூர்வம் மற்றும் அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கப்படும். இம்மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களது மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பிரிக்கப்பட்டு, பணியிடங்கள் ஒதுக்கப்படும். தேர்வு நடக்கும் மாதங்கள்:ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதங்களில் முதனிலைத் தேர்வு நடக்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் முதன்மைத் தேர்வு நடக்கும். எனவே கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் உங்களுக்கு எளிதாக உள்ள விருப்பபாடம் ஆகியவற்றை சிறப்பாக எழுதுதல் ஆகியவற்றை செய்தால் உங்களின் அதிகாரி கனவு நிச்சயம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்