உள்ளூர் செய்திகள்

நேபாள விபத்தில் சிக்கியவர்களுக்கு தேர்வு தள்ளிவைப்பு

நேபாளத்தில் கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் சிக்கிக் கொண்ட சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழக தேர்வை தள்ளி வைக்குமாறு உயர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை மேற்கு முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் தாக்கல் செய்தார். மனுவில், எங்கள் கல்லூரியில் இருந்து 42 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் நேபாளத்துக்கு கல்வி சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு நடந்த விபத்தில்2 மாணவிகள் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம் நடத்தும் பருவத் தேர்வு நவம்பர் 3ம் தேதி துவங்குகிறது. எனினும் நேபாள விபத்தில் சிக்கிய மாணவர்கள் இப்போது பல்கலை தேர்வை எழுதும் மனநிலையில் இல்லை. எனவே எங்களுக்கான தேர்வை தள்ளி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மனு மீதான விசாரணையின் போது, இப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் தேர்வை தள்ளி வைக்க சென்னை பல்கலைக்கழகம் ஒத்துக் கொண்டது. இதையடுத்து மார் கிரிகோரியோஸ் கல்லூரியின் சமூகப் பணிகள் துறை மாணவர்களுக்கான தேர்வை தள்ளி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், டிசம்பர் முதல் வாரம் அந்த மாணவர்களுக்கு தேர்வை நடத்தும் வகையில் புதிய தேர்வு கால அட்டவணையை சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்