உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு கல்விக்கு வழிகாட்டும் இண்டஸ் பவுண்டேஷன்

ஏறக்குறைய 1 கோடியே 21 லட்சம் என்ற அளவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் இருக்கையில், அவர்களின் உயர்கல்வி தேவையை சமாளிக்க, வெளிநாட்டுப் பல்கலைகள் மற்றும் பலவித நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மேலும், இன்றைய பொருளாதார தாராளமய சூழலில், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது. அதன்பொருட்டு, அம்மாணவர்களுக்கு முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. எனவே, வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு விசா மற்றும் விண்ணப்பித்தல் செயல்பாட்டிலிருந்து, சேர்க்கைப் பெறுவது வரை துணைநின்று வழிகாட்டுவதுடன், ஒருங்கிணைப்பு ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட பலவித படிப்புகளை அங்கீரிக்கும் பணியை இண்டஸ் பவுண்டேஷன்(INDUS FOUNDATION) மேற்கொள்கிறது. வழிகாட்டுதல் மாநாடுகள் இந்த அமைப்பு இந்தியாவின் சில முக்கிய நகரங்களில், தனது செயல்பாடு தொடர்பான சர்வதேச மாநாடுகளை நடத்துகிறது. இந்தாண்டு, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் நடந்துவருகிறது. டெல்லி மாநாடு கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் முடிவடைந்துவிட்ட நிலையில், நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில், பெங்களூர் மாநாடு துவங்கவுள்ளது. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி ஒத்துழைப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும் இந்த மநாட்டின் நிகழ்ச்சி நிரல் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலை விரிவாக கண்டு, விபரங்களை அறிந்துகொள்ள http://www.indus.org/indusall/frames1/Banglore_Program_Details.pdf என்ற இணையதளம் செல்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்