பிரிட்டனில் கட்டாயமாக்கப்படும் சமையல் கலை கல்வி
2011ம் ஆண்டிலிருந்து பிரிட்டனில் செகண்டரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு சமையல் கலை கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 100 கோடி ரூபாய் செலவிடப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் பள்ளி மாணவர்களின் உணவுப்பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை நோய்களிலிருந்து காப்பாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், ஆசியா மற்றும் உலகின் முக்கிய உணவுப் பழக்க வழக்கங்கள் இதில் கற்றுத் தரப்படும். சமையல் கலையை அறியும் மாணவர்களுக்கு பிற தீய பழக்கங்கள் தொற்றிக் கொள்வது குறைவாகவே அறியப்படுவதாக பிரிட்டனின் கல்வியாளர்கள் கருதுகிறார்கள். ‘பாஸ்ட் புட்‘ மற்றும் உடல் பருமன் பிரச்னைகளை சமையல் கலையை அறியும் மாணவர்கள் உணர்ந்து அதை தங்களது வீட்டிலேயே நடைமுறைப்படுத்துவர் என இவர்கள் கருதுகிறார்கள். மாணவிகளை விட மாணவர்களுக்கு இது கற்றுத் தரப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகிறார்கள். சமையலை அறிவதில் மாணவிகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இது தவறு என்றும் அவர்கள் கூறுகிறார்கள். உலகின் குப்பைத் தொட்டியாக இந்தியா பயன்படுத்தப்படுவதைப் போலவே இந்திய மாணவர்களின் வயிறு தான் அத்தனை பாஸ்ட் புட்களுக்குமான குப்பைத்தொட்டியாக மாறியிருப்பதை எப்போதும் எதையாவது தங்களது குழந்தைகளின் வாயில் திணிக்கும் பெற்றோர் எப்போது உணருவார்களோ?