உள்ளூர் செய்திகள்

பிரிட்டன் பள்ளி குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கிடையாது!

லண்டன்: பிரிட்டனை சேர்ந்த மிகப்பெரும் பள்ளியான, நாட்டிங்காம் ஈஸ்ட் அகடமி, குழந்தைகளுக்கு வீட்டுப்பாடத்தை ரத்து செய்துள்ளது. அதேசமயம், இந்த பள்ளியில், பள்ளி தேர்வுக்காக, பாடங்களை திரும்பப் படிப்பது ஊக்குவிக்கப்படும். கட்டாய வீட்டுப்பாடம் அளிக்கப்படாது. பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுடன் ஓய்வாக, பள்ளி பாடப்புத்தகங்களை படிப்பதற்கு ஊக்குவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பாடங்கள், குழந்தைகள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவதாலும், வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தங்களுக்கு தரப்படும் வீட்டுப் பாடங்களை சிறப்பாகவும், அதே நேரம், வசதியற்ற குடும்பத்தின் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை சரிவர செய்ய முடியாமலும், அவர்கள் மத்தியில் ஏற்றதாழ்வு ஏற்படுவது இதற்கான காரணங்களாக அந்த பள்ளியின் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த பள்ளியில், தற்போது, 3,570 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி திறந்ததும், வீட்டுப்பாடத்தை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக, பள்ளி நடவடிக்கைகளுக்கு பிந்தைய கூடுதல் பாடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பள்ளியின் முதல்வராக பதவியேற்க இருக்கும் பர்ரி டே, ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், தங்களின் வீட்டுப்பாடங்களை முடிக்க உதவி பெற முடியாது என்று உறுதியாக நம்புகிறார். அதே நேரம், வசதியான வீட்டுக் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடமோ, வீடு வந்து கற்றுத் தரும் டியூஷன் ஆசிரியர் உதவியுடனோ வீட்டுப்பாடங்களை சிறப்பாக முடித்து விடுகின்றனர். “வீட்டுப்பாடங்களால், ஏழை குடும்பங்கள் மட்டுமின்றி வசதியான குடும்பங்களிலும் ஏராளமான மோதல்கள், சண்டைகளை ஏற்படுத்துகிறது. இதனால், தங்களின் குழந்தைகள் பள்ளி முடிந்து மிக தாமதமாக வந்தாலும், அதை பெற்றோர் கண்டு கொள்ளாத போக்கு நிலவுகிறது. எனவே, வீட்டுப்பாடங்களால் கல்வித் திட்டத்துக்கு எந்த பயனும் இல்லை,” என்று, பெர்ரி டே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்