உள்ளூர் செய்திகள்

கேரளாவில் கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் மாயம்

கேரளா, கொச்சி, கட்டாரி பாக் பகுதியில், கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரின், குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி மாணவர்களில், இரு மாணவியர் உட்பட, நான்கு மாணவர்கள், 5ம் தேதி மாயமாகி விட்டனர். அவர்களில் ஒருவர், 10ம் வகுப்பும், மற்ற மூவர், பிளஸ் 1ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மாணவர்கள் மாயமானது குறித்து, கொச்சி துறைமுகம் மற்றும் தோப்பும்படி போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்