மலையேற்றப் பயிற்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கல்லூரி மாணவர்கள் 40 பேர் பாபநாசத்தில் மலையேறும் பயிற்சியை துவக்கினர். நெல்லை மாவட்டத்தில் அம்பை அரசு கலைக்கல்லூரி, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி, பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி, சங்கர்நகர் சங்கர்பாலிடெக்னிக், கிள்ளிக்குளம் வேளாண்கல்லூரி ஆகிய கல்லூரிகளின் என்.சி.சி.,மாணவர்களுக்கு பாபநாசம் வனப்பகுதியில் மலையேறும் பயிற்சி நவ., 5ம் தேதி துவங்கியது. ஓய்வுபெற்ற டி.ஆர்.ஓ.,லட்சுமணன் துவக்கிவைத்தார், லெப்டினல் கர்னல் குப்தா, சுபேதார்கள் நாகமுத்து, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துவக்க நாளில் புலிகள் காப்பகமான முண்டன்துறை துவங்கி கொடமாடி எஸ்டேட் வரையிலும் மலையேற்றப்பயிற்சி பெறுகின்றனர். தொடர்ந்து 4 நாட்களில் 100 கி.மீ., தூரம் நடைப்பயிற்சி செய்யஉள்ளனர்.