உள்ளூர் செய்திகள்

ரேபரேலியில் நாட்டின் முதல் ஏவியேஷன் பல்கலை

இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், வேணுகோபால், காங்., துணை தலைவர், ராகுல் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. இதில், காங்., தலைவர் சோனியாவின், ரேபரேலி தொகுதியில், நாட்டின், முதல், விமானத்துறை கல்விக்கான பல்கலையை அமைப்பது என்றும், அடுத்தாண்டு, ஜூலை முதல், இந்த பல்கலை செயல்படத் துவங்கும் என்றும், முடிவெடுக்கப்பட்டது. இதற்கான, அடிக்கல் நாட்டும் விழா, அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ளது. இந்த திட்டம், 202 கோடி ரூபாய் மதிப்பில், செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்