உள்ளூர் செய்திகள்

கட் அடிக்காத மாணவருக்கு ஹெலிகாப்டர் பயணம்

இதனை உணர்ந்த ஜார்க்கண்ட் மாநில அரசு, மாணவர்களைப் பள்ளியில் இருந்த புது முயற்சிகளை எடுத்து வருகிறது. புதுமையான முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.   இத்திட்டத்தின் வாயிலாக, பள்ளி செல்லும் மாணவர்கள் ஹெலிகாப்டர் அல்லது கிளைடர் இத்திட்டத்தின் வாயிலாக, மாணவர்கள் ஹெலிகாப்டர் அல்லது கிளைடர் விமானத்தில் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.   70 சதவீதம் அட்டென்டன்ஸ் கொண்டிருந்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதுமையான திட்டத்தை ஜார்க்கண்ட் மாநில முதல்வர் வரும் நவம்பர் 10ம் தேதி அன்று தொடங்கி வைக்கவுள்ளார். இந்த புதிய திட்டத்தின் வாயிலாக பள்ளிகளுக்கிடையே ஒரு ஆரோக்கியமான போட்டிச்சூழல் உருவாகுவதுடன், பள்ளியிலிருந்து பாதியில் விலகும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக்குறையும் என்று நம்பப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் சார்ந்த 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விமானப்பயணம் மேற்கொள்ள உளளனர். இதற்கான செலவுகளை மனித வள அமைச்சகமே ஏற்கவுள்ளது. ஏற்கனவே இம்மாநிலத்தில் மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம், முடிதிருத்தும் பணிகள் போன்ற புதுமையான மாணவர் சார்ந்த திட்டங்களை மனிதவள அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சராசரி கல்வியறிவு 65 சதவீதம் ஆக இருக்கும் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இது 54 சதவீதம் ஆக இருப்பதால் இப்புதுமையான முறைகளை அம்மாநில அரசு கையாள்வதாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஜார்க்கண்ட் மாணவர்களின் வாழ்க்கையில்இனி குதூகலம்தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்