ஆசிரியர்களுக்கான வழிகாட்டியில் பாலியல் கல்வி நீக்கம்
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய செகண்டரி கல்விக்கான வாரியம் ஆசிரியர்களுக்கான வழிகாட்டியில் இருந்து பாதுகாப்பான செக்ஸ் பற்றிய பகுதிகளை நீக்கவுள்ளது. அடலஸன்ட் எனப்படும் வளர்இளம் பருவத்தினருக்கு பாலியல் பற்றிய கல்வியை எப்படி போதிப்பது என்பதை இந்த வழிகாட்டியில் கற்றுக் கொடுக்கிறது. இதுவரை பாதுகாப்பான பாலியல் முறைகள் பற்றிய பகுதிகள் இதில் இடம் பெற்றிருந்தன. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், மாணவர்கள் பாலியலை ஒதுக்குவது எப்படி என்பது பற்றிய பகுதிகள் மட்டுமே இதில் இடம் பெறவுள்ளன என சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மும்பை போன்ற நகரங்களில் டேட்டிங் என்பது மாணவர்களிடைய சாதாரணமாக காணப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் பயன்பாடானது மாணவர்களிடம் அதிகமாக அறியப்படுகிறது. பொதுவாக இளைஞர்கள் சந்திக்கும் இது போன்ற பிரச்னைகளை ஆசிரியர்கள் எப்படி நிர்வகிப்பது என்பதை இந்த வழிகாட்டி போதிக்கிறது. எனினும் இதை அப்படியே ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என சி.பி.எஸ்.இ. கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.