சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி
சிங்கப்பூர் அரசின் ஏற்பாட்டின்படி, இரண்டு கல்வி அமைச்சக அலுவலகர்களுடன் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் 18 பேர் நவ. 24ம் தேதி டிச. 12ம் தேதி வரை 15 நாட்கள் சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் சென்னை மாநகரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிற்சி பெற்று வருகிறார்கள். சுற்றுலாத் துறையின் ஒருங்கிணைப்புடன் பள்ளிக் கல்வி இயக்குநரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன்படி, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் தமிழ் கற்பித்தல் உத்திகள் குறித்து தேர்ந்த ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். 8 நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் பயிற்சியும், இரண்டு நாட்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறும். இப்பயிற்சியின் மூலம் இவர்கள் சிங்கப்பூர் மாணவர்களுக்கு சிறப்பாக தமிழ் மொழியை கற்பிப்பார்கள். இதற்கிடையில் சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் சென்னை, மாமல்லபுரம், பாண்டிச்சேரி, ஸ்ரீபுரம் பொற்கோவில், காஞ்சிபுரம் முதலான இடங்களுக்குச் சுற்றுலா சென்று வருவார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.